ரோட்டரி கழகத்தின் 2026–2027ஆம் ஆண்டிற்கான முதலாவது மக்கள் நலத் திட்டம் ஆரம்பம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மாணவர்களின் கற்றல் சூழலை மேம்படுத்தும் நோக்கில், மட்டக்களப்பு ரோட்டரி கழகம் (Rotary Club of Batticaloa Heritage) தனது 2026–2027ஆம் ரோட்டரி ஆண்டிற்கான முதலாவது மக்கள் நலத் திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

அதன் பிரகாரம், இத்திட்டம் “கற்றலுக்கான இடங்களை உருவாக்குதல்” (Creating Spaces for Learning) என்ற தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சுங்கான்கேணி வலம்புரி விநாயகர் வித்தியாலயம், வாழைச்சேனை இந்துக் கல்லூரி மற்றும் சந்திவெளி சித்தி விநாயகர் வித்தியாலயம் ஆகிய மூன்று பாடசாலைகளுக்கு 100 மேசைகள் மற்றும் நாற்காலிகள் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

குறித்த திட்டத்தினை செயற்படுத்துவதற்கு நியூசிலாந்து நாட்டின் க்றிஸ்ட்சர்ச் சன்ரைஸ் ரோட்டரி கழகம் (Rotary club of Christchurch Sunrise) நிதி அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாணவர்கள் சிறந்து விளங்குவதற்குத் தேவையான வசதியான மற்றும் ஆதரவான கற்றல் சூழல்களை உருவாக்கி இந்த வளங்களின் மூலம் இளம் உள்ளங்களுக்கு உத்வேகம் அளித்து நமது சமூகத்தில் கல்வியின் அடித்தளத்தை வலுப்படுத்தும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects