சந்தையில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ள நிலையில், பலா, ஈரப்பலா, கிழங்கு மற்றும் வற்றாளை போன்ற உணவுப் பொருட்களின் விலையையும் சில வர்த்தகர்கள் அதிகரித்துள்ளனர்.
இதன் பிரகாரம் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளமையால் நுகர்வோர் இவ்வாறான காய்கறிகளை கொள்வனவு செய்வதில் அதிகம் நாட்டம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், பலா, வாழைப்பூ, வாழைக்காய், மாம்பழம் மற்றும் கீரை வகைகள் என்பன தற்போது அதிகரித்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன
அதன் அடிப்படையில் , ஈரப்பலா காய் ஒன்று 180 ரூபாவுக்கும், வாழைக்காய் 280 ரூபாவுக்கும், வாழைப்பூ 130 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
அத்துடன், பொன்னாங்கண்ணி கீரையும் வல்லாரை கீரையும் 60 ரூபா முதல் 80 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் விற்கப்படுகிறது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇