மட்டக்களப்பில் தமிழோடு விளையாடு நிகழ்வானது வாகை அம்மையாரின் தலைமையில் ஆணி வேர் சிறுதானிய உற்பத்திகளும் தமிழ் ஒபேரா நிருவனத்தின் ஏற்பாட்டில் கல்லடிப்பால சிறுவர் பூங்காவில் இரண்டாவது தடவையாக இடம்பெற்றது.
இந் நிகழ்வில் சிறுவர்கள் மற்றும் பெற்றோர் ஆர்வத்தோடு பங்குபற்றியிருந்தனர்.
மக்களிடையே கலப்பற்ற தூய தமிழில் உரையாடுவதை மேம்படுத்தும் நோக்கில் தமிழோடு விளையாடு நிகழ்வு இடம் பெற்றது.
சிறுவர்களிடையே வேற்று மொழி கலப்பின்றி செந்தமிழில் உரையாடுவதை ஊக்கப்படுத்தும் முகமாக தமிழோடு விளையாடு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இவ் நிகழ்வானது வாரம் தோறும் நடத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது .
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇