கொழும்பு வாழ் மக்களுக்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள அறிவித்தல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

நீண்டகாலமாக செலுத்தப்படாதுள்ள நீர் கட்டண நிலுவைகளை வசூலிப்பதற்காக, இம் மாதம் 13 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை ‘நீர் விநியோக துண்டிப்பு வாரம்’ நடைமுறைப்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

கொழும்பு 01 முதல் கொழும்பு 15 வரை உள்ள அனைத்து பகுதிகளிலும் இந்த விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் அறிவித்துள்ளது.

தங்கள் நீர் விநியோகம் துண்டிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக, நிலுவைக் கட்டணங்களை வைத்துள்ள வாடிக்கையாளர்கள் அனைவரும் ஜூலை 13 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக தங்களது அனைத்து நிலுவைகளையும் செலுத்தி முடிக்குமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அவசரமாகக் கேட்டுக்கொண்டுள்ளது.

தொடர்ச்சியான மற்றும் தடையற்ற நீர் சேவையைப் பெற்றுக்கொள்வதை உறுதி செய்வதற்காக, வாடிக்கையாளர்கள் தங்களது கட்டணங்களை உரிய நேரத்தில் செலுத்துமாறு நீர் விசேட சபை மேலும் கோரிக்கை விடுத்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects