கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் ஜனாதிபதி நிதியத்தின் மருத்துவ உதவிக் காசோலைகளும் கல்வி உதவித் தொகைகளும் வழங்கி வைப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

ஜனாதிபதி நிதியத்தின் நடவடிக்கைகளை பிரதேச மட்டம் வரை பன்முகப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ், கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் ஊடாக மருத்துவ சிகிச்சைக்காக தெரிவு செய்யப்பட்ட நான்காவது மற்றும் ஐந்தாவது பயனாளிகளுக்கான நிதியுதவிகள் வழங்கப்பட்டன.

இதன்படி, கே.சந்தரதாசவிற்கு ரூ.2,50,000 பெறுமதியான காசோலையும், ஏ.இஷ்ஹாக்கிற்கு ரூ.3,00,000 பெறுமதியான காசோலையும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாரக், உதவி பிரதேச செயலாளர் ஏ.ஜுமானா ஹஸீன் மற்றும் சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.நஜீம் ஆகியோர் கலந்து கொண்டு காசோலைகளை பயனாளிகளிடம் கையளித்தனர்.

மேலும், சமூக வலுவூட்டல் அமைச்சின் ஊடாக மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலகத்தினால் வழங்கப்படும் கல்வி உதவித் திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளின் பிள்ளைகளுக்கும் கல்வி உதவித் தொகைகளும் வழங்கப்பட்டன.

அத்துடன், தகுதி பெற்ற ஒவ்வொரு பயனாளிக்கும் தலா ரூ.30,000 வீதம் நிதியுதவி வழங்கப்பட்டது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects