மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரனின் வழிகாட்டுதலின் கீழ் 243 ஆம் படைப்பிரின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சன்டிம குமாரசிங்கவின் மேற்பார்வையில் 243 படைப்பிரிவினால் மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையை அழகு படுத்தும் செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
மாவட்டத்தின் புராதன ஒல்லாந்தர் கோட்டையினை அதிகளவிலான சுற்றுலா பயணிகள் பார்வையிட்டுவரும் நிலையில் சுற்றுலா பிரயாணிகளின் வருகை அதிகரித்துள்ளதனால் இக்கோட்டையை அழகு படுத்தி சுற்றுலா பயணிகளை கவர்ந்தீர்ப்பதற்காக இச் செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
243 படைப்பிரிவினால் கல்லடி பாலத்தின் அருகில் காணப்பட்ட பற்றைகளை அகற்றி அழகு படுத்தும் செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇