இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இரண்டு விண்வெளி ஆராய்ச்சியாளர்களை ஏற்றிச் சென்ற போயிங் ஸ்டார்லைனர் விண்கலம், ஆளே இல்லாமல் பூமிக்குத் திரும்பவுள்ளது.
தொழில்நுட்ப சிக்கல்கள் இருந்ததால் இந்த விண்கலத்தின் மூலம் அவர்களை பூமிக்குக் கொண்டு வருவது பாதுகாப்பானதா என்ற சந்தேகம் எழுந்தது.
பின்னர் அந்த இரண்டு விண்வெளி ஆராய்ச்சியாளர்களும் இன்னும் சில மாதங்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திலே தங்கியிருந்து ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் விண்கலம் மூலம் பூமிக்குத் திரும்புவார்கள் என்று நாசா அறிவித்தது.
அதற்கு முன்னதாகப் போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் பூமிக்கு ஆளில்லாமலேயே திரும்பும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டார்லைனர் விண்கலம் பூமிக்குத் திரும்புவதற்கான வேலைத்திட்டங்களை நாசாவும் போயிங் நிறுவனமும் நிறைவு செய்திருந்தன.
இந்த நிலையில் நாளை (6) ஆம் திகதி, இந்த விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமியை நோக்கிய தனது பயணத்தை ஆரம்பிக்கும்.
இறுதிக்கட்டத்தில் ஏதேனும் தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டால் அல்லது வானிலையில் மாற்றங்கள் ஏற்பட்டால் மாத்திரம் இந்தப் பயணத்தில் மாற்றங்கள் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் 2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமளவில் பூமிக்குத் திரும்பவார்கள் என நாசா அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇