மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் ஒளிவிழா நிகழ்வுகள் 14-12-2023 அன்று அதிபர் ஆர். பாஸ்கரன் தலைமையில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றன.
செல்வன் அனோலிதனின் இறைவணக்கத்துடனும், அதிபரின் வரவேற்புரையுடனும் ஆரம்பித்த இந் நிகழ்வில் வேதாகமம் வாசிப்பு, கரோல் கீதம் இசைத்தல், மதகுருமார்களின் ஆசியுரை போன்ற ஆன்மீக நிகழ்வுகளும், வரவேற்பு நடனம், கிராமிய நடனம், சிங்கள நடனம் போன்ற மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் கல்லூரியின் மாணவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி்ச்சங்க உறுப்பினர்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…
4 Responses
கல்வி, விளையாட்டு, தலைமைத்துவம், கலை, கலாசாரம், ஒழுக்கம் என பல துறைகளிலும் பிரகாசித்துவரும் எனது பாடசாலைக்கு வாழ்த்துக்கள்.
Weldone boys. Superb.
Very good. Keep it up
நன்றி மதகு ஊடகம்.