கண்டி மாவட்டத்தின் திகன மற்றும் மெனிக்ஹின்ன ஆகிய பகுதிகளில் 48 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாகத் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் இந்த நீர் வெட்டு இன்று (23.07.2026) காலை 8:30 மணி முதல் இம் மாதம் 25 ஆம் திகதி காலை 8:30 மணி வரை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாகவே இந்த நீர் விநியோகத் தடை விதிக்கப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










