7 புதிய பாதைகளில் தனது போக்குவரத்தை முன்னெடுக்கவுள்ள மேலும் பல மெட்ரோ பேருந்துகள்!

கொழும்பு நகரத்தின் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பொதுமக்களுக்கு மிகவும் இலகுவான மற்றும் நேரத்தை மீதப்படுத்தும் பயணத்தை வழங்குவதற்காக ‘லங்கா மெட்ரோ ட்ரான்சிட்’ (Lanka Metro Transit) நிறுவனம் 7 புதிய பேருந்து பாதைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

நவீனமயப்படுத்தப்பட்ட இந்தப் போக்குவரத்து சேவையின் மூலம் கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள புறநகர்ப் பகுதிகளுக்குச் செல்பவர்கள் எவ்வித சிரமமுமின்றி முறையாகப் பயணிக்க முடியும் என்பதே இதன் பிரதான நோக்கமாகும்.

மாகும்புர ➜ புறக்கோட்டை (23.3km)

மில்லினியம் சிட்டி ➜ கோட்டை (22.3 km)

கடவத்த ➜ மாக்கும்புர (34.8 km)

தெமட்டகொட ➜ பாணந்துறை (28.7 km)

பத்தரமுல்ல ➜ ஏகல (29.9 km)

கொள்ளுப்பிட்டியைச் சுற்றிய (14 கி.மீ)

கெஸ்பேவவில் ➜ புறக்கோட்டை (35.7 கி.மீ)

இந்த விரிவுபடுத்தப்பட்ட பேருந்து சேவை ஊடாக, கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளுக்கு இடையிலான போக்குவரத்து இணைப்பு மேம்படுவதோடு, பயணிகளின் பொதுப் போக்குவரத்து துறையும் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects