வாழைச்சேனை பிரதேசத்தில் ‘அத்தம’ வேலைத்திட்டம் முன்னெடுப்பு!

வாழைச்சேனை பிரதேசத்தில் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் “ஒற்றுமையாக ஒன்றிணைவோம்; கிளீன் சிறிலங்காவைக் கட்டியெழுப்புவோம்” என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டு வரும் அத்தம நிகழ்ச்சித் திட்டம், 08.08.2026 அன்று நடைபெற்றது.

கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட, தியாவட்டவான் கிராம சேவகர் பிரிவில் பிரதான நிகழ்வு நடைபெற்ற அதேவேளை ஏனைய கிராம சேவகர் பிரிவுகளிலும் ‘அத்தம’ வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சுற்றுச்சூழல் தூய்மை, சமூக ஒற்றுமை மற்றும் பொதுமக்களின் பங்கேற்பை வலுப்படுத்தும் நோக்கில் இவ்வேலைத்திட்டம் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

அதன் ஒரு பகுதியாக, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக் தலைமையில் தியாவட்டவான் கிராம சேவகர் பிரிவில் அத்தம நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம்.ஹலால்தீன், பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.எம்.ஸாஹித், நாவலடி இராணுவ முகாம் கெப்டன் சமீர ராஜபக்ச மற்றும் இராணுவத்தினர், தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட நிறைவேற்றுக் குழு உறுப்பினர் எம்.ஏ.சீ.எம்.நியாஸ்தீன் ஹாஜி, பிரிவிற்குட்பட்ட சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், ஏனைய பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், தியாவட்டவான் பிரஜா சக்தி தலைவர் எம்.பி.பௌர்தீன், பிரஜா சக்தி உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு சமூக மட்ட தரப்பினரும் கலந்துகொண்டு தங்களது பங்களிப்பை வழங்கினர்.

இதன்போது தியாவட்டவான் மதீனா பள்ளிவாயல் வளாகத்தில் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது. பள்ளிவாயல் வளாகம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளைத் தூய்மைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் மதீனா பள்ளிவாயல் வளாக துப்பரவு பணவ்களில் 35ற்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்களும், 70ற்கும் மேற்பட்ட பொதுமக்களும் கலந்து கூட்டாக மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அரச நிறுவனங்கள், உள்ளூராட்சி மன்றம், பாதுகாப்புத் தரப்பினர், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து தமது பிரதேசத்தைத் தூய்மையாகவும் அழகாகவும் பேணுவதன் அவசியத்தை எடுத்துக்காட்டும் வகையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects