இந்த ஆண்டின் ஜூன் மாதம் வரையிலான முதல் 6 மாதங்களில் கறுவா மற்றும் கறுவா சார்ந்த தயாரிப்புகள் ஏற்றுமதி மூலம் 4,000 கோடி ரூபா (40 பில்லியன் ரூபா) வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டின் ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், இது 25 மில்லியன் அமெரிக்க டொலர் கணிசமான உயர்வாகும்.
வரலாற்றிலேயே கறுவாவுக்கு மிக அதிகளவிலான விலை கிடைக்கும் காலப்பகுதியாக இது பதிவாகியுள்ளதாக கறுவா அபிவிருத்தி திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் காரணமாக, உள்ளூர் கறுவா உற்பத்தியாளர்களுக்குத் தற்போது சந்தையில் அதிகபட்ச விலை கிடைத்து வருகின்றது. அதற்கமைய, ‘அல்பா’ (Alba) தரத்திலான கறுவா ஒரு கிலோகிராம் 7,500 ரூபாவிற்கும், ‘C5’ தரத்திலான கறுவா ஒரு கிலோகிராம் 5,500 ரூபா முதல் 6,000 ரூபா வரையிலும் விற்பனையாகின்றது.
நடப்பு ஆண்டின் இறுதிக்குள் கறுவா ஏற்றுமதி மூலம் 300 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, நாட்டின் கறுவா தொழில்துறையின் வளர்ச்சிக்காக விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு 2,500 இலட்சம் ரூபாவை (250 மில்லியன் ரூபா) ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()









