கிழக்கு மாகாண மக்களுக்கு சிறந்த சுகாதார சேவையை வழங்கும் நோக்கில் அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் அடிப்படையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சுகாதார அமைச்சினால் 432 மில்லியன் ரூபா செலவில் நிரமானிக்கப்பட்ட புதிய இருதயவியல் சிகிச்சைப் பிரிவு மற்றும் நோயாளர் விடுதி 17.08.2026 அன்று திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வு வைத்தியசாலையின் திட்டமிடல் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்றதுடன் வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ஆர். முரளீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
புதிதாக அமைக்கப்பட்ட கட்டடத்தொகுதியில் நோயாளர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனி பிரிவுகளும் அமைக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, நவீன வைத்திய உபகரணங்களும், நோயாளர்களை பராமரிப்பதற்கான பல்வேறு வசதிகளும் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இதய நோயாளர்களுக்கான தனியான சிகிச்சைப் பிரிவு மற்றும் விடுதி அமைக்கப்படுவது நீண்டகால தேவையாக இருந்து வந்த நிலையில், புதிய பிரிவு திறக்கப்பட்டுள்ளமை நோயாளர்களுக்கு சிறந்த சிகிச்சை சேவைகளை வழங்குவதில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
நிகழ்வில், இதய நோயியல் சிகிச்சைப் பிரிவு அமைப்பதற்கான செயற்பாடுகளில் பங்காற்றிய வைத்தியசாலையின் சிரேஷ்ட இருதய நோயியல் நிபுணர் வைத்தியர் அருள்நிதி வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் சமூகத்தினரால் கௌரவிக்கப்பட்டார்.
இந்த நிகழ்வில் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்கள், வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.








இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()







