ISO 37001 இலஞ்ச எதிர்ப்பு முகாமைத்துவக் கட்டமைப்பு பற்றிய இரு நாள் செயலமர்வு!

இலங்கையின் அரச துறையில் இலஞ்ச மற்றும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளையும், நிறுவன நேர்மையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ISO 37001 – இலஞ்ச எதிர்ப்பு முகாமைத்துவக் கட்டமைப்பு பற்றிய இரு நாள் செயலமர்வு, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் 18.08.2026 அன்று இலங்கை மன்றக் கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்டது.

சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட இலஞ்ச எதிர்ப்பு நடவடிக்கைகள், நிறுவன நேர்மை மற்றும் அதற்காகப் பயன்படுத்தப்படும் வழிமுறைகள் பற்றிய விழிப்புணர்வை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த செயலமர்வின் ஆரம்ப உரையை ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சந்திமா விக்கிரமசிங்க மேற்கொண்டதோடு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க பிரதான உரையாற்றினார். சர்வதேச வளவாளர் மற்றும் நிபுணர் பிரவீன் குமார் பஸ்ரிச்சா, ஐக்கிய நாடுகள் தொழில்துறை அபிவிருத்தி அமைப்பின் (UNIDO) தேசிய தர நிபுணர் சுமத்தி எல். ராஜசிங்கம் ஆகியோர் விசேட உரையாற்றினார்.

இலஞ்ச எதிர்ப்பு முகாமைத்துவ கட்டமைப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் ஊழல் அபாயங்களைத் தடுத்தல், உள்நாட்டுக்கட்டுப்பாட்டு நடைமுறைகளை மேம்படுத்துதல், நேர்மையான நிர்வாகம் மற்றும் அரச நிறுவனங்களில் நேர்மை சார்ந்த கலாசாரத்தை நிறுவுதல் என்பன குறித்து இந்த திட்டத்தின் ஊடாக விசேட கவனம் செலுத்தப்பட்டது.

நிறுவன பலவீனங்களைக் கண்டறிதல், ஊழல் அபாயங்களை நிர்வகித்தல் மற்றும் பொறுப்புக்கூறலை வலுப்படுத்த உதவும் உள்ளக விவகாரப் பிரிவுகளை (Internal Affairs Units) திறம்பட செயல்படுத்துதல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

தேசிய மட்டத்தில் நேர்மையை அடிப்படையாக கொண்ட கலாசாரத்தை கட்டியெழுப்புவதற்காக அரச துறைக்கு மட்டுமன்றி, வங்கி மற்றும் தனியார் துறைகளுக்கும் நேர்மை மற்றும் இலஞ்ச எதிர்ப்பு நடவடிக்கைகளை விரிவாக்குவது குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கையின் அரச துறையில் இலஞ்சம் மற்றும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளையும், நிறுவன நேர்மையை மேலும் வலுப்படுத்துவதற்காக, சர்வதேச நிபுணத்துவ அறிவு மற்றும் சிறந்த நடைமுறைகளை வழங்கும் இந்தத் திட்டம் ஐக்கிய நாடுகள் தொழில்துறை அபிவிருத்தி அமைப்பு (UNIDO) ஐரோப்பிய ஒன்றியம் (EU) ஆகியவற்றின் ஆதரவுடன் நடைபெறுகிறது.

இந்த நிகழ்வில், அமைச்சுகள், திணைக்களங்கள், வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects