மட்டக்களப்பு மாவட்டத்தில் நீர் வெட்டு தொடர்பான முக்கிய அறிவித்தல்!

தற்போது நிலவுகின்ற வரட்சியான காலநிலை காரணமாக உன்னிச்சை குளத்தின் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்து செல்கின்றது. இந்நிலையில் தொடர்ச்சியான நீர்வழங்கலை மேற்கொள்வது சாத்தியமற்றதாக காணப்படுகின்றது.

எனவே எதிர்வரும் 22 ஆகஸ்ட் 2026 முதல் நாளாந்தம் நீர் வெட்டை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது (உத்தேச நீர்வெட்டு நேரம் முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை).

மேலும் இந்நிலமை வழமைக்கு திரும்பும் வரை, நீர்ப்பாவனையாளர்கள் நீரை சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்வதுடன், இதனால் ஏற்படும் அசௌகரியங்களை தவிர்த்துக் கொள்ளுமாறும் மட்டக்களப்பு மாவட்ட தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரிய பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் பொறியியலாளர் S.ஜயந்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects