மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகத்தின் அனுசரணையுடன் விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித் திட்டம் ஒன்று மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் 25.08.2026 அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
“வீட்டினை அடிப்படையாக கொண்ட முன் பிள்ளைப்பருவ அபிவிருத்தி” தொடர்பாக பெற்றோர்களை விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித் திட்டம் ஒன்று முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி கே.விஷ்ணுகாந்தின் ஒருங்கிணைப்பின் கீழ் மண்முனைப்பற்று உதவிபிரதேச செயலாளர் கி.இளங்குமுதன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வளவாளராக பட்டிப்பளை பிரதேச செயலக முன்பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜி.உமாரமணன் பங்குற்றினார். அத்துடன் இந் நிகழ்வில் 65 முன்பிள்ளைப்பருவ சிறார்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.







இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()








