நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக ஆறு மாவட்டங்களில் 88,068 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 28 பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள 27,475 குடும்பங்களைச் சேர்ந்த 88,068 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 27 பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள 27,048 குடும்பங்களைச் சேர்ந்த 86,368 பேருக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
குடிநீர் இன்மையால் மொனராகலை மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 11,751 குடும்பங்களைச் சேர்ந்த 37,890 பேருக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
அதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் 9,547 குடும்பங்களைச் சேர்ந்த 28,523 பேருக்கும், அம்பாறை மாவட்டத்தில் 8,847 பேருக்கும், பதுளை மாவட்டத்தில் 8,383 பேருக்கும் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
மேலும், பொலன்னறுவை மாவட்டத்தில் 2,646 பேருக்கும், இரத்தினபுரி மாவட்டத்தில் 79 பேருக்கும் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
வறட்சியான காலநிலை தொடரும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()







