போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதக் கட்டணங்களை இணைய வழியில் செலுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ‘Gov pay’ அமைப்பைப் போன்ற போலி இணையத்தளத்தை உருவாக்கி மோசடிகளில் ஈடுபடுவோர் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு போக்குவரத்துப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் டபிள்யு பி.ஜே. சேனாதீர பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொதுமக்களின் பணம் மற்றும் முக்கியமான தகவல்களைத் திருடும் மோசடி இதன் மூலம் இடம்பெற்று வருகிறது. Gov pay மூலம் பணத்தை செலுத்துவதற்கு வேறு எந்த இணையதளமும் கிடையாது என்பதால் இத்தகைய நிதி மோசடிகளில் சிக்கி ஏமாற்றுக்கு உள்ளாக வேண்டாம்.
பொதுமக்களின் சேவையை இலகுபடுத்தும் நோக்கிலும் நிதி மோசடிகளைக் குறைக்கும் நோக்கிலும் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை Gov pay முறையின் மூலம் செலுத்தும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், Gov pay இணையத்தள அமைப்பைப் போன்ற போலி இணையத்தளத்தை உருவாக்கி பொதுமக்களின் பணம் மற்றும் இரகசிய தரவுகளைத் திருடும் மோசடி இடம்பெற்று வருகிறது.
குறித்த இணையதளத்தின் இணைப்புகள் குறுஞ்செய்திகள் மற்றும் வாட்ஸ்அப் செய்திகள் மூலமாக தொலைப்பேசிகளுக்கு அனுப்பப்பட்டு பொதுமக்களின் பணம் இவ்வாறு திருடப்படும் இடம்பெறுகிறது. எனவே இவ்வாறான போலி நிதி மோசடிகளில் சிக்க வேண்டாம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()









