வளிமண்டலவியல் திணைக்களத்தினால் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளுக்குப் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கரைக்கு அப்பாலுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், அப்பகுதியிலுள்ள கடல் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். 

எனவே, குறித்த கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடற்போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்சார் மற்றும் மீன்பிடிச் சமூகத்தினர் இது குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு அத்திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. 

இன்று (08.09.2026) முற்பகல் 11.00 மணிக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை அறிவித்தல் நாளை வரை செல்லுபடியாகும்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects