நாட்டின் பல முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் இயல்பு நிலையை அடைந்தது – நீர்பாசனத் திணைக்களம்

நாட்டின் பல முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தற்போது இயல்பு நிலையை அடைந்து வருவதாகப் நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சில ஆறுகளின் நீர்மட்டம் தற்போது சிறிய அளவிலான வெள்ளப் பெருக்காகக் காணப்பட்ட போதிலும், அது படிப்படியாகக் குறைந்து வருவது அவதானிக்கப்பட்டுள்ளதாக அதன் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ முகாமையாளர் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்தார்.

அதன்படி, நில்வலா கங்கையின் தல்கஹகொட நீர்மட்டம் இன்னும் சிறிய அளவிலான வெள்ள மட்டத்தில் காணப்பட்ட போதிலும், அது படிப்படியாகக் குறைந்து வருவதாகவும், கிங் கங்கையின் மேல் பகுதிகளில் நீர்மட்டம் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ள போதிலும், பத்தேகம பகுதியில் நீர்மட்டம் இன்னமும் சிறிய வெள்ளப் பெருக்காகவே உள்ள போதிலும் அதுவும் படிப்படியாகக் குறைந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மில்லகந்த மற்றும் குடா கங்கை ஆகியவற்றின் நீர்மட்டங்களும் சிறிய அளவிலான வெள்ளப் பெருக்காகக் காணப்பட்ட போதிலும், அதுவும் தற்போது படிப்படியாக இயல்பு நிலையை நோக்கி வந்து கொண்டிருப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், நீர்பாசனத் திணைக்களத்தினால் நிர்வகிக்கப்படும் ஏனைய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் இயல்பு நிலையில் காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன், இன்றைய தினம் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள முன்னறிவிப்புகளில் அதிக மழைவீழ்ச்சி பற்றிய முன்னறிவிப்புகள் எதுவும் இல்லாததால், தற்போதைய ஆறுகளின் நீர்மட்டம் வெள்ளப் பெருக்காக மாறாது எனப் நீர்பாசனத் திணைக்களம் எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects