வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அம்பர் நிற எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது கடும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அம்பர் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று (29.09.2026) காலை 10.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, இன்று இரவு 11.30 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும், இதன்போது கடுமையான மின்னல் தாக்கங்களுடன் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பான இடங்களில் தங்குங்கள்: திறந்தவெளிகளில் அல்லது மரங்களுக்கு கீழ் நிற்பதைத் தவிர்த்து, பாதுகாப்பான கட்டிடங்களுக்குள் செல்லுங்கள்.

மின் சாதனங்களைத் தவிர்க்கவும்: மின்சார இணைப்பில் உள்ள தொலைபேசிகள் மற்றும் மின் உபகரணங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

திறந்த வாகனப் பயணங்களைத் தவிர்க்கவும்: மிதிவண்டி, டிராக்டர் மற்றும் படகு போன்றவற்றில் பயணிப்பதைத் தவிர்க்கவும்.

(வளிமண்டலவியல் திணைக்களம்)

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects