இலங்கை மகளிர் அணித்தலைவி சமரி அத்தபத்து, அவுஸ்திரேலிய மகளிர் பிக் பாஷ் லீக்கின் (Australian Women’s Big Bash League) அடுத்த 3 தொடர்களில் சிட்னி தண்டர்ஸ் அணியுடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.
இதற்கு முன்னைய தொடரில் (2023-2024) சிட்னி தண்டர்ஸ் அணிக்காக அவர் விளையாடினாலும், காயமடைந்த வீராங்கனை ஒருவரை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காகவே அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
இருப்பினும் அந்தத் தொடரில் சமரி அனைத்து சுற்றுகளிலும் சிறப்பாக விளையாடியதுடன், 5 அரைச் சதங்களுடன் 552 ஓட்டங்களைப் பெற்றார்.
மேலும் அவர் சிட்னி தண்டர்ஸ் அணிக்காக 9 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.
அவரது சிறப்பான திறமையால், போட்டியின் நாயகிக்கான விருதை சமரி அத்தபத்து பெற்றுக்கொண்டார்.
எவ்வாறாயினும், 8 அணிகள் பங்குபற்றிய இப்போட்டியில் சிட்னி தண்டர்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தையே பிடித்தது.
இதேவேளை இந்த ஆண்டுக்கான பிக் பாஷ் மகளிர் லீக் தொடர் ஒக்டோபர் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇