OCBTE Campus இல் டிப்ளோமா கற்கைகளைப் பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு 20-12-2023 அன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அம்கோர் நிறுவனத்தின் ஸ்தாபகரும், பணிப்பாளருமான பரமசிவம் முரளிதரனும், விசேட அதிதியாக அம்கோர் நிறுவனத்தின் சிரேஸ்ட நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் யோகநாதன் சிவயோகராஜனும், கௌரவ அதிதிகளாக OCBTE Campus இன் ஆலோசகர் விஸ்வலிங்கம் கஜேந்திரன் மற்றும் OCBTE Campus இன் செயலாளர் ஜே.எம்.பிஸ்ருல்ஜெபி ஆகியோரும், உத்தியோகத்தர்கள், மாணவர்கள், நலன் விரும்பிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது அலுவலக முகாமைத்துவம், ஆங்கிலம், தகவல் தொழில்நுட்பம், சிங்களம், கேக் அலங்காரம், அழகுக்கலை, ஆரி வேலைப்பாடுகள் எனப் பல துறைகளில் டிப்ளோமா கற்கைநெறிகளைப் பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் OCBTE Campus இன் இவ் ஆண்டிற்கான சிறந்த ஆசிரியர் மற்றும் அர்ப்பணிப்பு மிக்க உத்தியோகத்தர் ஆகியோருக்கான விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதில் 113 மாணவர்களின் கற்கைகளைப் பூர்த்தி செய்வதற்கான நிதியுதவி மானிய அடிப்படையில் அம்கோர் நிறுவனம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்திகழ்வில் மாணவர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
விபரம் காணொளியில்….
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….