தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு!

நிலவும் அதிக மழைவீழ்ச்சி காரணமாக தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் 07.10.2026 அன்று இரவு முதல் தலா ஒரு அடி வீதம் திறக்க நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர் அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த சில நாட்களாக நீர்த்தேக்கத்தின் மேல் மற்றும் மத்திய நீரேந்து பகுதிகளில் பெய்த அதிக மழை காரணமாக, நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வான் பாயும் மட்டம் வரை உயர்ந்தமையினாலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வான் கதவுகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, தெதுறு ஓயாவுக்கு விநாடிக்கு சுமார் 1,400 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகின்றது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த குருநாகல் மாவட்ட அனர்த்த முகாமைத்து மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் விராஜ் திசாநாயக்க, இது வெள்ள அபாய நிலைமை அல்ல என்றும், இருப்பினும் நீர்த்தேக்கத்திற்குக் கீழ் பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் அதனையடுத்த வீதிகளைப் பயன்படுத்துவோர் வரும் நாட்களில் அவதானத்துடன் செயல்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects