ஜெனீவா நகரில் மீண்டும் திரையிடப்படும் ‘போடியார்’ திரைப்படம்!

Visual Art Movies நிறுவனத்தின் தயாரிப்பில், கோடிஸ்வரனின் இயக்கத்தில் உருவான ‘போடியார்’ திரைப்படமானது மட்டக்களப்பில் ஒன்பது அரங்கு நிறைந்த காட்சிகள் திரையிடப்பட்டன.

வைத்தியர் க.அருளானந்தம், சிரேஷ்ட விரிவுரையாளர் சதா சண்முகநாதன் மற்றும் Visual Art Movies நிறுவனத்தின் உரிமையாளர் ப.முரளிதரன் ஆகியோரின் தயாரிப்பில் உருவான இத்திரைப்படம், கனடா மற்றும் சுவிட்சர்லாந்தின் ஆரோவ், பாசல் ஆகிய நகரங்களில் Universal Mind Rising Foundation (UMRF) நிறுவனத்தின் ஏற்பாட்டில் அரங்கு நிறைந்த காட்சிகள் திரையிடப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக, எதிர்வரும் 10.10.2026 அன்று சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ‘போடியார்’ திரைப்படம் இரண்டு காட்சிகள் திரையிடப்படவுள்ளன.

திரையிடல் விபரங்கள்:

திகதி: 10.10.2026

முதலாவது காட்சி: மாலை 6.00 மணி

இரண்டாவது காட்சி: மாலை 7.10 மணி

இடம்: Salle du Rondeau, 1er étage

முகவரி: Bd des Promenades 26, 1227 Carouge, Genève, Switzerland

Universal Mind Rising Foundation (UMRF) நிறுவனத்தினால் திரையிடல்கள் மூலம் திரட்டப்படும் நிதி, கல்வி மற்றும் சமூகத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலய மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில், 20.01.2026 அன்று மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. அத்துடன், பாடசாலை அதிபர் அலுவலகத்திற்குத் தேவையான மேசை, கதிரை மற்றும் கணித உபகரணப் பெட்டிகளும் திரையிடல்கள் மூலம் பெறப்பட்ட நிதியிலிருந்து வழங்கப்பட்டன.

கலைஞர்களுக்கான உரிய அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் Universal Mind Rising Foundation (UMRF) முன்னெடுத்து வரும் சமூகப் பணியின் ஓர் அங்கமாக, ஈழமகளீர் சங்கமம் – ஜெனீவாவுடன் இணைந்து இத்திரையிடலை ஏற்பாடு செய்துள்ளதுடன், கலைத்துறையின் ஊடாகக் கிடைக்கும் வளங்களை கல்வி மற்றும் சமூக மேம்பாட்டுக்காகப் பயன்படுத்தும் நோக்கில் UMRF முன்னெடுத்து வரும் இத்தகைய முயற்சிகள் சமூகப் பொறுப்புணர்வின் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதாக UMRF நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

‘போடியார்’ திரைப்படத்தின் ஜெனீவா திரையிடல், ஈழத்துக் கலைஞர்களின் படைப்பாற்றலை சர்வதேச அரங்கில் எடுத்துச் செல்லும் மற்றுமொரு முயற்சியாக அமையவுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects