உலக மனநல தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் பல்துறை செயலமர்வு!

மட்டக்களப்பில் உலக மனநல தினத்தை முன்னிட்டு உதவி மாவட்டச் செயலாளர் ஜி.பிரணவனின் தலைமையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் திட்ட முகாமையாளர் புஷ்பராணி பிகறாடோவின் பங்கேற்புடன் பல்துறை செயலமர்வானது 14.10.2026 அன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றும் அரச அதிகாரிகளுக்கான மனோஹரி மொடியூல் பயிற்சி நெறியின் கீழ், அரச சேவையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் சம்பவங்களைக் கையாளுதல் தொடர்பான பயிற்சிகள் இதன்போது வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிரேஷ்ட உளநல மருத்துவ நிபுணரும் மனோஹரி மொடியூலின் ஸ்தாபகருமான வைத்தியர் எம். கணேசனினால் அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பவ முகாமைத்துவம் தொடர்பாக வளவாளன்மை மேற்கொண்டார்.

இதன்போது சமூக மட்டத்தில் காணப்படும் பிரச்சனைகளை உதாரணங்களுடன் விளக்கி அனுபவப் பகிர்வின் மூலம் தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டது.

சமூக மட்டத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்களைச் சுமுகமாகக் கையாள்வதற்குத் தேவையான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் நிபுணரால் வழங்கப்பட்டது.

மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையம், கடந்த 2023ஆம் ஆண்டு முதல் மாவட்டச் செயலகத்துடன் இணைந்து உத்தியோகத்தர்களுக்கு மனோஹரி மொட்யூல் பயிற்சிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects