ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலக ஒளி விழா நிகழ்வு 19.12.2023 அன்று பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி.நிருபா பிருந்தன், கணக்காளர் திருமதி.டிலானி ரேவதன், நிருவாக உத்தியோகத்தர் திருமதி.புஷ்பம் ஜேசுதாசன் ஆகியோரின் பங்குபற்றுதலிலும் இடம் பெற்ற நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக செங்கலடி புனித நிக்கலஸ் தேவாலய அருட்தந்தை ஜெ.வினோஐன் (சொ.ப),
செங்கலடி மெதடிஸ்த தேவாலயத்தின் அருட்பணியாளர் செபமாலை பிறின்சன் மற்றும் சகல உத்தியோகத்தர்கள் , அவர்களது பிள்ளைகள் எனப்பலரும் கலந்து கொண்டனர் .
அத்தோடு கணக்காளர் திருமதி.டிலானி ரேவதன் நெறியாள்கையின் கீழ் உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் பிள்ளைகளும் கலை நிகழ்வுகளை நிகழ்த்தியிருந்தனர்.
மேலும் இந்நிகழ்வில் கலை நிகழ்வுகளில் ஈடுபட்ட உத்தியோகத்தர்கள், பிள்ளைகள் மற்றும் ஏனைய பிள்ளைகளுக்கும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇