மத்திய மலைநாட்டின் நீரேந்துப் பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் பலத்த மழையினால் நோர்டன்பிரிட்ஜ் பகுதியில் அமைந்துள்ள விமலசுரேந்திர நீர்த்தேக்கம் முழுமையாக நிரம்பி, இன்று (21.10.2026) காலை முதல் மேலதிக நீர் வான் மேவிப் பாய்ந்து வருகின்றது.
நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையால், கேசல்கமு மற்றும் களனி ஆறுகளில் நீர்மட்டங்களும் ஓரளவு உயர்ந்துள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, களனி ஆற்றின் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் ஆற்றைப் பயன்படுத்தும் நபர்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()








