ரியாத்துக்கும், தம்மாமுக்கும் இடையிலான விமான சேவைகள் தொடர்ந்தும் இரத்து – ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

கொழும்புக்கும் தம்மாமுக்கும் இடையில் மற்றும் கொழும்புக்கும் ரியாத்துக்கும் இடையிலான அனைத்து விமானச் சேவைகளும் எதிர்வரும் 1 ஆம் திகதி வரையில் தொடர்ந்தும் இடைநிறுத்தப்பட்டிருக்கும் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.

பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்புச் சூழ்நிலை காரணமாக, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இன்று (22.10.2026) அறிக்கையொன்றை விடுத்து தெரிவித்துள்ளது.

பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பே எமது முதன்மை முன்னுரிமையாகும் எனத் தெரிவித்துள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம், வர்த்தக நடவடிக்கைகளுக்கு உகந்த சூழ்நிலை இருப்பதாக மதிப்பிடப்பட்ட பின்னர் விமானச் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக  குறிப்பிட்டுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு, வாடிக்கையாளர்கள் 1979 (இலங்கைக்குள்), +94 11 777 1979 (சர்வதேசம்), WhatsApp +94 74 444 1979 (உரையாடல் மட்டும்) ஆகிய இலக்கங்கள் ஊடாகவும், உங்கள் பயண முகவர் மூலமாகவும் அல்லது www.srilankan.com என்ற இணையதளத்தைப் பார்வையிட்டும் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects