தியாவட்டவான் கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள பெயரிடப்படாத வீதிகளுக்கு பெயரிட்டு வர்த்தமாணியில் பிரசுரிப்பதற்கான ஆலோசனை கூட்டம் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.எம்.ருவைத் தலைமையில் கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 21.12.2023 அன்று நடைபெற்றது.
நிகழ்வில் தியாவட்டவான் கிராம உத்தியோகத்தர் பிரிவின் கிராம உத்தியோகத்தர் எம்.எம்.அன்வர் சாதாத்பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எச்.எம்.அறபாத், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எச்.எம்.முஹம்மத் ஆகியோர் கலந்து கொண்டனர் .
கிராம உத்தியோகத்தல் பிரிவில் உள்ள கிராம அபிவிருத்திச்சங்கம், மகளிர் கிராம அபிவிருத்தி சங்கம், முதியோர் சங்கம், இளைஞர் கழக உறுப்பினர்கள், விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் , பள்ளி வாயல்களின் பிரதிகள் மேற்படி கலந்துரையாடலில் பங்குபற்றி பெயரிடப்படாத வீதிகளுக்கு பெயர்களை முன் மொழிந்து ஆலோசனைகளையும் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇