டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் புதிய செயலாளராக இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான சட்டத்தரணி ரோஷன் கமகே நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான டி.ஆர்.டபிள்யூ.எஸ். தனபால இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்குரிய நியமனக் கடிதங்கள் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் 09.11.2026 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டன.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()








