இலங்கை கடற்படையின் புதிய பதில் பொறியியல் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட கொமடோர் நிலங்க கங்கானம்கே, 16.11.2026 அன்று கடற்படைத் தலைமையகத்தில் தனது பதவிக்கான கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவ லை பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் 10 ஆவது ஆட்சேர்ப்பைச் சேர்ந்த கடேட் அதிகாரியாக இலங்கை கடற்படையில் இணைந்து, 1994 ஆம் ஆண்டு இம் மாதம் 08 ஆம் திகதி அதிகாரியாக நியமிக்கப்பட்ட கொமடோர் நிலங்க கங்கானம்கே, பதில் பணிப்பாளர் நாயகம் (பொறியியல்) பதவியைப் பொறுப்பேற்பதற்கு முன்னர், கடல்சார் பொறியியல் பணிப்பாளராகக் கடமையாற்றினார்.





இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()







