தற்போது ஒன்லைன் பயணிகள் இருக்கை முன்பதிவு சேவையின் கீழ் 200 சொகுசு பஸ்கள் அடுத்த ஆண்டு சேவையில் இணைத்துக் கொள்ளப்படும் என இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.
sltb.eseat.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக ஒரு வருடத்திற்கும் மேலாக நடத்தப்பட்ட இணையத்தள பயணிகளுக்கான ஆசன முன்பதிவு சேவை மிகவும் வெற்றியடைந்துள்ளதாகவும் தலைவர் தெரிவித்தார்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஏறக்குறைய 80,000 பயணிகள் இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இலங்கை போக்குவரத்து சபைக்கு கிட்டத்தட்ட 35 மில்லியன் ரூபா வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
கிறிஸ்மஸ் விடுமுறையின் போது ஒன்லைன் சேவைக்கான தேவை அதிகரித்துள்ளதாகவும் , ஹொட்லைன் 1315 ஐப் பயன்படுத்தி இருக்கைகளை முன்பதிவு செய்யலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇