நவம்பர் 23 முதல் நாரஹேன்பிட்டி மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்கள சேவைகளுக்கு முன்பதிவு கட்டாயம்!

எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி தலைமை அலுவலகத்தினால் வழங்கப்படும் அனைத்துப் பொதுமக்கள் சேவைகளையும் முன்கூட்டியே நேரத்தை ஒதுக்கிக்கொள்ளும் (Appointment) முறைமையின் கீழ் மாத்திரம் முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் நலன்கருதி, 2026.11.23 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்பட்டிருந்த நாளாந்த முன்பதிவு வாய்ப்புகளின் எண்ணிக்கையைத் திணைக்களம் தற்போது இரட்டிப்புக்கும் மேலாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய, முன்னரை விடவும் அதிகளவான சேவை பெறுநர்களுக்கு நாளாந்தம் விரைவாகவும் இலகுவாகவும் தமது சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

சேவை பெறுநர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு முறைமைகளில் ஏதேனும் ஒரு முறைமையின் ஊடாகத் தமக்குப் பொருத்தமான நேரத்தை முன்கூட்டியே ஒதுக்கிக்கொள்ள முடியும்.

தொலைபேசி ஊடாக: 011 2 117 116 என்ற இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம்

இணையவழி (Online) ஊடாக: https://dmtappointments.dmt.gov.lk என்ற இணையத்தளத்திற்குப் பிரவேசிப்பதன் மூலம்

இதற்கமைய, எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் நாரஹேன்பிட்டி தலைமை அலுவலக வளாகத்திற்கு அருகில் அதிகாலை முதலே தேவையற்ற விதத்தில் வரிசைகளில் காத்திருப்பதைத் தவிர்க்குமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

சேவை பெறுநர்களின் வசதி மற்றும் நேரத்தை மீதப்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த முன்கூட்டியே நேரத்தை ஒதுக்கிக்கொள்ளும் முறைமையை மாத்திரம் பின்பற்றித் தமது சேவைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகம், ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் துஷார பெர்னாண்டோ அறிவித்துள்ளார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects