தொழிலுக்காக புலம்பெயர்தல் பற்றிய தேசிய செயற்றிட்டம் கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில் தொழில் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஜஸ்டினா முரளிதரன், திருகோணமலை மாவட்ட செயலாளர் சாமிந்த ஹெட்டியாராச்சி மற்றும் அம்பாறை மாவட்ட மேலதிக செயலாளர் ஜெகராஜன் பங்கேற்புடன் நிகழ்வு இடம் பெற்றது.
கிழக்கு மாகாணத்தில் கடமை புரியும் அரச உயர் அதிகாரிகளுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான தேசிய கொள்கை மற்றும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்றிட்ட தெளிவூட்டல்கள் தொடர்பான பயிற்சி பாசறை நிகழ்வு இடம் பெற்றது.
புலம் பெயர்ந்து தொழிலாளர்களை கௌரவப்படுத்தி அவர்களுக்கான அங்கிகாரத்தை வழங்கி அவர்களை பலப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அதன் ஒர் அம்சமாக அரச உயர் அதிகாரிகளுளின் பங்களிப்பை அதிகம் பெற்றுக் கொள்வதற்கு தேவையான தெளிவூட்டல்கள் இதன் போது வழங்கப்பட்டது.
எதிர்காலத்தில் இச் செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்தலை கண்காணிப்பதற்கான தேசிய மாகாண மற்றும் மாவட்ட பொறிமுறைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இந் நிகழ்வில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சின் சார்பில் ஆலோசகர் பத்மினி ரத்நாயக்க, சிரேஸ்ட உதவி செயலாளர் நிகரில்காந்த் மற்றும் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் வசத்தா குமாரி, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் திட்டப்பணிப்பாளர் நிஷாந்த வர்ண சூரிய, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் ஆலோசகர் ஶ்ரீயாணி பேரேரா பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர் என பல உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇