களுவாஞ்சிகுடியில் சிறுவர், முதியோர் தின நிகழ்வுகள்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்துடன் களுவாஞ்சிகுடி நந்தவனம் சமூக நலன்புரி அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்த சிறுவர், முதியோர் தின விழா நந்தவனம் சமூக நலன்புரி அமைப்பின் தலைவர் சா. கருணாகரன்பிள்ளை தலைமையில் நந்தவனம் முதியோர் இல்லத்தில் இடம்பெற்றது.

” ஆரோக்கியமிகு அகவையினை நோக்கி உலகளாவிய சிரேஷ்ட பிரஜைகளுக்கான மனித உரிமைகளை தலைமுறைகள் கடந்து நிறைவேற்றுதல்” எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில், களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

இதன்போது முதியோர்களும் சிறுவர்களும் பல்வேறு பாரம்பரிய விளையாட்டு மற்றும் கலை நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன், முதியோர்களுக்கான அத்தியாவசிய பொருட்களும் உடைகளும் அன்பளிப்புச் செய்யப்பட்டன.

நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் சத்யகெளரி தரணிதரன், பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர், பொது சுகாதார பரிசோதகர், கிராம உத்தியோகத்தர், முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects