இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் மறுசீரமைப்பு திட்டங்களில் சமூகமட்ட அமைப்புகளின் பங்களிப்பு தொடர்பான கலந்துரையாடல் கொழும்பில் நடைபெற்றது.

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

உலக வங்கியினால் எதிர்காலத்தில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள நிதியுதவிகளினால் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்களின் வடிவமைப்பு, அமுலாக்கம், கண்காணிப்பு போன்ற செயற்பாடுகளில் அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சமூகமட்ட அமைப்புகளினை உள்ளடக்குவதன் முக்கியத்துவம் பற்றிய விரிவான கலந்துரையாடல் ஒன்று 25, 26-03-2024 ஆகிய தினங்களில் கொழும்பில் நடைபெற்றது.

Transparancy International Sri Lanka நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் திருமதி. நதீஷானி பெரேராவின் தலைமையிலும், தலைமை அதிகாரி திரு K. கௌரீஸ்வரனின் நெறிப்படுத்தலிலும் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் பணியாற்றும் சிவில் சமூக அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 40 பேரும், உலக வங்கிப் பிரதிநிதிகளும், Partnershi for Transparency அமைப்பின் பிரதிநிதியும் கலந்து கொண்டு இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் மறுசீரமைப்புக் கொள்கைகளின் விளைவுகள் தொடர்பாக விரிவாக ஆராய்ந்தனர்.

இதன்போது Transparency International Sri Lanka நிறுவனத்தினால் மாவட்டம் தோறும் செயற்படும் தகவல் அறியும் உரிமைக்கான மத்திஸ்தானங்களை(RTI Hubs) எதிர்காலத்தில் சமூக பங்கேற்பு மத்தியஸ்தானங்களாக (Citizen Engagement Hubs) தரமுயர்த்தி சேவைகளை விரிவாக்கும் சாத்தியக்கூறுகளும் ஆராயப்பட்டது.

பங்குபற்றிய சிவில் சமூகப் பிரதிநிதிகளால் பல்வேறு ஆக்கபூர்வமான ஆலோசனைகளும், கருத்துகளும் பகிரப்பட்டமையும் அவை உலகவங்கிப் பிரதிநிதிகளிடம் ஆவணமாக கையளிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects