மட்டக்களப்பில் கணக்கெடுப்பாளர்களுக்கான பயிற்சி நிகழ்வு!

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் பொருளாதாரக் கணக்கெடுப்பு 2025/26 இன் கீழ், விவசாயத் துறை சார்ந்த தகவல்களைச் சேகரிக்கும் பணிகளைத் துரிதப்படுத்தும் நோக்கில் புதிய கணக்கெடுப்பு உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி நிகழ்வு 18.11.2026 அன்று மட்டக்களப்பு புதிய மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டத் தொகைமதிப்பு ஆணையாளருமான ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு, புள்ளிவிபரத் திணைக்களத்தின் புள்ளிவிபரவியலாளரும் உதவித் தொகைமதிப்பு அத்தியட்சகருமான ரீ.ஜெய்தனனின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபரும் பிரதி தொகைமதிப்பு ஆணையாளருமான சுதர்ஷினி ஸ்ரீகாந்த், மட்டக்களப்பு மாவட்ட வலய மேற்பார்வை உத்தியோகத்தரும் சிரேஷ்ட புள்ளிவிபர உத்தியோகத்தருமான எம்.எஸ்.எம்.றூமி உள்ளிட்ட திணைக்கள உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர், நாட்டின் விவசாயத் துறையில் காணப்படும் முன்னேற்றங்கள் மற்றும் சவால்களை அடையாளம் கண்டு, எதிர்கால விவசாய அபிவிருத்தித் திட்டங்களை அரசாங்கம் திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்கு இக்கணக்கெடுப்பின் மூலம் பெறப்படும் தகவல்கள் பெரிதும் உதவியாக அமையும் எனத் தெரிவித்தார்.

மேலும், இக்கணக்கெடுப்பின் வெற்றியானது துல்லியமான தகவல் சேகரிப்பிலேயே தங்கியுள்ளதால், பொதுமக்கள் கணக்கெடுப்புப் பணிகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களுக்கு உண்மையான தகவல்களை வழங்கி ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அத்துடன், கணக்கெடுப்புப் பணிகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் துல்லியமான புள்ளிவிபரங்களைச் சேகரித்து, அவற்றை முறையாகப் பதிவுசெய்து இற்றைப்படுத்த வேண்டும் எனவும் இதன்போது உயர் அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டது.

நாட்டின் விவசாயத் துறையின் தற்போதைய நிலைமையை மதிப்பீடு செய்து, எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களைத் திட்டமிடுவதற்குத் தேவையான நம்பகமான தரவுகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இக்கணக்கெடுப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects