மட்டக்களப்பு மாவட்டத்தில் CATALYZE திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிவில் சமூக அமைப்புகளின் செயற்பாடுகளை வலுப்படுத்தி, மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படவுள்ள CATALYZE திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் 19.11.2026 அன்று புதிய மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலை, கிரிசலிஸ் நிறுவனத்தின் கிழக்கு மாகாணத் திட்ட முகாமையாளர் யூ.எல். சம்சுதீன் ஏற்பாடு செய்திருந்தார்.

இதன்போது கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில் தெரிவுசெய்யப்பட்ட எட்டு பிரதேச செயலகப் பிரிவுகளில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆராயப்பட்டது.

இத்திட்டத்தின் ஊடாக 120 சிவில் சமூக அமைப்புகளின் ஆற்றல்களை மேம்படுத்துவதுடன், பெண்கள் மற்றும் இளைஞர்களின் தலைமைத்துவம், காணி உரிமைகள், வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பாலின சமத்துவம் மற்றும் சமூகப் பங்கேற்பு ஆகிய துறைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் 1.5 மில்லியன் யூரோ நிதியுதவியுடன், CARE Germany நிறுவனத்தின் தலைமையில், கிரிசலிஸ் மற்றும் Law & Society Trust (LST) ஆகிய நிறுவனங்களின் இணைப்பில் 2026 மார்ச் முதல் 2029 பெப்ரவரி வரை 36 மாதங்களுக்கு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதன் கீழ் சமூகத் தலைவர்களுக்கான பயிற்சிகள், கொள்கை ஆய்வுகள், மனித உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வுச் செயற்பாடுகள் மற்றும் ஊடகத்துறை மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதன் மூலம் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு நேரடிப் பயன்களை வழங்குவதுடன், மக்கள் பங்கேற்புடனான பொறுப்புக்கூறல் மிக்க ஆட்சிமுறையை வலுப்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இக்கலந்துரையாடலில் பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர்கள், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர், கிரிசலிஸ் நிறுவனத்தின் வடக்கு மாகாணத் திட்ட முகாமையாளர் எம். பிரபாகரன் உள்ளிட்ட நிறுவனத்தின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

கிரிசலிஸ் நிறுவனம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு சமூக நலன் சார்ந்த வேலைத்திட்டங்களைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects