மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு புதிய சுற்றாடல் உத்தியோகத்தர்கள் நியமனம்!

மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் களப்பணியை மேலும் வினைத்திறனாக்கும் நோக்கில், 281 புதிய சுற்றாடல் உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு 25.11.2026 அன்று சுற்றாடல் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அதன் அடிப்படையில், நிறுவன ஆட்சேர்ப்பு நடைமுறைகளுக்கு அமைய நடத்தப்பட்ட தெரிவுப் பரீட்சைகளில் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களே இவ்வாறு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இவர்கள் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைமைக் காரியாலயம், மாகாணக் காரியாலயங்கள் மற்றும் மாவட்டக் காரியாலயங்களுக்கு இணைக்கப்படவுள்ளனர்.

நீண்ட காலத்திற்குப் பின்னர் இவ்வாறு ஒரே தடவையில் பெருமளவிலான சுற்றாடல் உத்தியோகத்தர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

இந்த நிலையில், மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு இறுதியாக 2017-ஆம் ஆண்டிலேயே சுற்றாடல் உத்தியோகத்தர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்ததுடன், இதற்கு முன்னர் இவ்வாறானதொரு பெருமளவிலான உத்தியோகத்தர்கள் குழு 1997-ஆம் ஆண்டிலேயே ஒரே தடவையில் நிறுவனத்திற்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டிருந்தது.

இலங்கையின் பிரதான சுற்றாடல் ஒழுங்குபடுத்தல் நிறுவனமான மத்திய சுற்றாடல் அதிகாரசபையானது, சுற்றாடலைப் பாதுகாத்தல் மற்றும் முகாமைத்துவம் செய்தல் ஆகிய பணிகளை முன்னெடுத்து வருகின்றது.

தேசிய சுற்றாடல் சட்டம் திருத்தப்பட்டதைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய சுற்றாடல் சட்டதிட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளை மேலும் முறையாகவும் வினைத்திறனாகவும் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான மனித வளத்தைப் பெற்றுக்கொள்வதே இந்த ஆட்சேர்ப்புகளின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.

சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக பட்டபெந்தி தலைமையில் நடைபெற்ற இந்த நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில், சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயக்கொடி, மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் திலக் ஹேவாவசம் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects