இலங்கையில் பக்கவாத நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் பக்கவாத (Stroke) நோயாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக களனிப் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் பிரிவு பேராசிரியர் உதய ரணவக்க தெரிவித்துள்ளார்.

கடந்த தசாப்த காலத் தரவுகளைப் பகுப்பாய்வு செய்ததில் இந்த நிலைமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய பக்கவாத சங்கத்தினால் 26.11.2026 அன்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய பேராசிரியர் உதய ரணவக்க,

“எமது பிராந்தியத்தில் நிலவும் பக்கவாதப் போக்கை நோக்கினால், இலங்கையில் இதன் தாக்கம் மிக அதிகமாக உள்ளது.

எமது கிராமங்கள் மற்றும் பிரதேசங்களில் வாழும் சனத்தொகையை எடுத்துக்கொண்டால், பத்துப் பேரில் ஒருவருக்குப் பக்கவாதம் ஏற்பட்டுள்ளமை நாம் மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

பக்கவாத நோயாளர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்குத் தேவையான விசேட பக்கவாத சிகிச்சைப் பிரிவுகள் இலங்கையில் தற்போது சுமார் பத்து மாத்திரமே உள்ளன.


எமக்கு இதனை விடப் பாரிய அளவில் இந்த சிகிச்சை பிரிவுகள் தேவைப்படுகின்றன. குறைந்தபட்சம் ஒவ்வொரு மாவட்டத்துக்கும், ஒவ்வொரு பிரதான வைத்தியசாலைக்கும் தலா ஒரு சிகிச்சைப் பிரிவேனும் அமைக்கப்பட வேண்டும்.

அதேபோன்று, பக்கவாதத்துக்கு ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை அளிக்கக்கூடிய மருந்துகள் உள்ளன.

ஆனால், அதற்கான சிகிச்சையை வழங்கக்கூடிய வசதிகள் கொண்ட வைத்தியசாலைகள் இன்னும் சிலவே உள்ளன.

இவை அனைத்தையும் நாம் மேம்படுத்த வேண்டும். வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் பக்கவாத நோயாளர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு காணப்படுகிறது.

இலங்கையில் பதிவாகும் பக்கவாத நோயாளர்களில் சுமார் 75 சதவீதமானோருக்கு மூளைக்குச் செல்லும் இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு காரணமாகவே இந்நோய் ஏற்படுகிறது” எனத் தெரிவித்தார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects