மாதர் சங்க பயிற்சி நிலையத்தின் பிரதேச மட்ட விற்பனை கண்காட்சி – 2023 வவுணதீவில் இடம்பெற்றது அதன் பிரகாரம் மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தின் கிராம அபிவிருத்தி பிரிவினால் ஏற்பாடு செய்திருந்த விற்பனை கண்காட்சியானது (29.12.2023) அன்று பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் வழிகாட்டலில் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தரின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்கள சிரேஷ்ட தையல் போதனாசிரியை , நிருவாக உத்தியோகத்தர், மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர் .
இதன் பொது மாதர் சங்க பயிற்சி நிலையத்தினால் உருவாக்கப்பட்ட ஆடைகள், கைவண்ண பொருட்கள் என பல தரப்பட்ட பொருட்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டதுடன் அவை விற்பனையும் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.