தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நிறைவடையும் காலம் குறித்து வெளியான அறிவித்தல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் அனைத்து பிரசார நடவடிக்கைகளும் மே 3ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையுமென தேர்தல் ஆணைக்குழுவின் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, மே 3ஆம் திகதி முதல் தேர்தல் நடைபெறும் நாள் வரை அமைதிக் காலம் அமுலில் இருக்கும் எனவும், அக்காலப்பகுதியில் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். 
 

இன்று வரை வீடு வீடாகச் சென்று உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், இன்றைய தினத்திற்கு பின்னர் வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்கள் இந்த மாதம் 30 ஆம் திகதிக்குப் பின்னர் தங்கள் பகுதியில் உள்ள உப தபால் அலுவலகத்திற்குச் சென்று தமக்கான வாக்காளர் அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம்  என தேர்தல் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

இம்முறை உள்ளூராட்சித் தேர்தலின் போது வாக்களிக்கும் போது சுண்டு விரலைப் பயன்படுத்த தேர்தல் ஆணைக்குழு முடிவு செய்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.

இதேவேளை, நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளில் 94 வீதத்துக்கு மேற்பட்ட வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects