இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 722,276 சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் மாத்திரம் 229,298 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
அவர்களில் அதிகளவானோர் இந்தியாவில் இருந்து வந்ததுடன் அந்த எண்ணிக்கை 39,212 ஆகும்.
அத்துடன், ரஷ்யாவில் இருந்து 29,177 சுற்றுலாப்பயணிகளும், பிரித்தானியாவில் இருந்து 22,447 சுற்றுலாப்பயணிகளும், ஜேர்மனியில் இருந்து 17,918 சுற்றுலாப்பயணிகளும் இலங்கைக்கு வந்துள்ளனர்.
இதனிடையே, சீனா, அவுஸ்திரேலியா, போர்த்துக்கல் போன்ற நாடுகளில் இருந்தும் அதிகளவான சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகை தந்ததாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…