பொதுவெளியில் வெளியிடப்பட்ட “இழப்பேனா உன்னை” விழிப்புணர்வுக் குறும்படம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

சுக வனிதையர் கிளினிக் தொடர்பான வேலைத்திட்டம் ஒன்றின் ஓர் அங்கமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட “இழப்பேனா உன்னை” எனும் குறும்படமானது பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி முரளீஸ்வரனின் தலைமையில் 12-11-2024 அன்று காட்சிப்படுத்தப்பட்டதுடன் தற்போது பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளது.

இக்குறும்படமானது கருப்பைக் கழுத்து மற்றும் மார்பக புற்று நோய் தொடர்பாக மக்கள் மத்தியில் குறிப்பாக பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வேலைத் திட்டத்திற்கான நிதி அனுசரணையை சமூக ஆர்வலர் மற்றும் வைத்திய கலாநிதி காந்தா நிரஞ்சன் வழங்கியுள்ளார்.

தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் குறும்படம் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த குறும்படத்திற்கான கதையை வைத்திய கலாநிதி நாகலிங்கம் மயூரன் எழுதியுள்ளார். அதற்கான திரைக்கதை மற்றும் வசனங்கள் எழுதி இயக்கியுள்ளார் குறுந்திரைச் செம்மல், இயக்குநர் கோடீஸ்வரன்.

இக்குறும்படத்தில் வைத்தியர் குளோடியா ரதி ஜெயரூபன், வைத்தியர் உதயகுமார், வைத்தியர் பிரஷாந்தி லதாகரன், தீபா தேவசகாயம், தர்மிகா ஸ்ரீகாந்தராசா ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளதுடன் ஒளிப்பதிவை புஸ்பகாந்தும், இசையை சங்கர்ஜனும் மேற்கொண்டுள்ளனர்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects