அவுஸ்திரேலியாவில் துவிச்சக்கர வண்டியில் 5000 கி.மீ தூரத்தை கடந்து சாதனை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட காமினி சந்திரசேகர அவுஸ்திரேலியாவின் மேற்கிலிருந்து கிழக்கு கடற்கரை வரையான கிட்டத்தட்ட 5000 கி.மீ தூரத்தை தனது துவிச்சக்கர வண்டியில் கடந்து சென்று சாதனை படைத்துள்ளார்.

அதன் பிரகாரம், 63 வயதான காமினி சந்திரசேகர, மார்ச் மாதம் 22 ஆம் திகதி அன்று பெர்த்தில் இருந்து புறப்பட்டு, மே மாதம் 03 ஆம் திகதி அன்று பிற்பகல் பிரிஸ்பேனின் நகர தாவரவியல் பூங்காவை சென்றடைந்துள்ளார்.

ஒவ்வொரு நாளும் சுமார் 100 முதல் 140 கி.மீ. பயணித்தார் என அவர் கூறினார்.

முழு சவாரிக்கும் அவருக்கு மூன்று ஓய்வு நாட்கள் உட்பட 42 நாட்கள் ஆனது என கூறினார்.

இந்த பயணத்தின் போது அதிக வெப்பம், பலத்த காற்று, நுளம்புகள், சீரற்ற பாதைகள், வன விலங்குகள் போன்றவற்றின் சவால்களை எதிர்கொண்டாகவும் அவர் கூறினார்.

இந்த சவாரி தன்னைத்தானே சவால் செய்து கொள்வது, ஒரு நேர்மறையான முன்மாதிரி வைப்பது மற்றும் “எதிர்காலத்திற்கு நல்லது செய்வது” பற்றியது என்று அவர் கூறினார்.

இந்த சவாரி மூலம் புற்றுநோய் ஆராய்ச்சியை ஆதரிப்பதற்காக பீட்டர் மெக்கல்லம் புற்றுநோய் அறக்கட்டளைக்காக காமினி $21,000க்கும் அதிகமாக நிதி திரட்டினார்.

இது காமினியின் இரண்டாவது பெரிய துவிச்சக்கர வண்டி சவாரி ஆகும் என அவர் கூறினார்.

2018 ஆம் ஆண்டில், மெல்போர்னில் இருந்து சிட்னிக்கு சவாரி செய்து முன்னதாக பெருமை பெற்றிருந்தார் என அவர் கூறினார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects