நீதிமன்றக் கட்டணங்கள் மற்றும் அபராதங்களைச் செலுத்தும் மின்னணு முறை தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்து!

நீதிமன்றக் கட்டணங்கள், அபராதங்கள் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை மின்னணு முறையில் (E-Payment) செலுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

பொதுமக்கள் நீதிமன்றக் கட்டணங்கள், அபராதங்கள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளுடன் தொடர்புடைய ஏனைய கொடுப்பனவுகளை மின்னணு முறையின் ஊடாகச் செலுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்தும் நோக்கில், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கும் மக்கள் வங்கிக்கும் இடையில் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது.

இந்நிகழ்வு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சில் நடைபெற்றது.

குறித்த ஒப்பந்தத்தில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் சார்பில் அதன் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான திருமதி அயேஷா ஜினசேனவும் , மக்கள் வங்கியின் சார்பில் பிரதி பொது முகாமையாளர் (கொடுப்பனவுகள் மற்றும் அட்டைகள்) ஐ.கே. இந்திக்கவும் கைச்சாத்திட்டனர்.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ், எதிர்காலத்தில் நீதவான் நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் மேல் நீதிமன்றங்களுக்கு செலுத்த வேண்டிய அபராதங்கள், முத்திரைக் கட்டணங்கள், வழக்குக் கட்டணங்கள் மற்றும் சான்றளிக்கப்பட்ட பிரதிகளைப் பெற்றுக்கொள்வதற்கான கட்டணங்கள் உள்ளிட்ட பல்வேறு கொடுப்பனவுகளை மின்னணு முறையின் ஊடாகச் செலுத்துவதற்கான வசதிகள் பொதுமக்களுக்கு கிடைக்கவுள்ளன.

நாட்டின் நீதித்துறை கட்டமைப்பை டிஜிட்டல் மயமாக்கும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் e-Courts திட்டத்தின் மற்றுமொரு முக்கிய முன்னேற்றப் படியாக இந்த வேலைத்திட்டம் அமைகின்றது.

இதன் மூலம் நீதித்துறை சேவைகளை மேலும் வினைத்திறனுடனும், இலகுவாகவும், பொதுமக்கள் எளிதில் அணுகக்கூடிய வகையிலும் வழங்குவதற்கு பங்களிப்பு வழங்கப்படும்.

மேலும், எதிர்காலத்தில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்குச் செலுத்தப்படும் கொடுப்பனவுகளுக்கும் இந்த மின்னணு கொடுப்பனவு வசதியை அறிமுகப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் மக்கள் வங்கியின் தலைவர் திரு. சந்தன குணியங்கொட, பிரதம முகாமையாளர் (அட்டை வணிகம் மற்றும் வாடிக்கையாளர் விவகாரங்கள்) திரு. மளிந்த லியனகே, முகாமையாளர் (அட்டை வணிகம் மற்றும் சந்தைப்படுத்தல்) திரு. அருண தந்தநாராயண மற்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மேலதிக செயலாளர் (சீர்திருத்தங்கள்) திருமதி கிஷாந்தி மீகஹபொல உள்ளிட்ட இரு தரப்பினையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects