லங்கா ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடருக்கான விளம்பரத் தூதுவராக அவுஸ்திரேலியாவின் முன்னாள் தலைவர் மைக்கல் க்ளார்க் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே விவியன் ரிச்சட்சன் மற்றும் வசீம் அக்ரம் போன்றவர்கள் இந்தத் தொடருக்கான விளம்பர தூதுவர்களாக செயற்படுகின்றனர்.
10 ஆண்டுகளுக்கு மேல் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய மைக்கல் க்ளார்க் 115டெஸ்ட் போட்டிகளில் 28 சதங்கள் அடங்கலாக 8643 ஓட்டங்களையும், 245 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 7981 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.
43 வயதான அவர் இந்த நியமனம் தொடர்பாகக் கருத்து தெரிவிக்கும் போது, எல்.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான விளம்பரத் தூதுவராகச் செயற்படுவது குறித்து ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்தார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇