ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் நூற்றாண்டு நிறைவு விழா தொடரை ஆரம்பிக்கும் முகமாக சுவாமி விவேகானந்தருக்கு சிலை அமைபதற்கான அடிக்கல் மட்டக்களப்பு புதிய கல்லடி பாலத்தின் அருகாமையில் நாட்டப்பட்டது.
இந் நிகழ்வானது மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீல மாதவானந்தா ஜீ மஹராஜ் அவர்களால் 01.01.2024 அன்று நடைபெற்றது.
இந் நிகழ்வில் ராமகிருஷ்ண மிஷன் உதவி பொது முகாமையாளர், மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன், முன்னாள் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், மட்டக்களப்பு உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் கணேசராசா உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.
விபுலானந்த அடிகளாரினால் ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் இலங்கை கிளை ஸ்தாபிக்கப்பட்டதுடன், 01.01.2024 அன்று ராமகிருஷ்ண பகவானின் கல்ப தரு தினம் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇