இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர், சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் மற்றும் குருநாகல் மாவட்டத்திலும் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.
மேலும் கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவும்.
இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களிடம் கோரியுள்ளது
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇